173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி சுதந்திரக் கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடத்தப்பட உள்ளது.
கொழும்பு கெம்பல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு விசேட அழைப்பிதழ்கள் அனுப்பி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Spread the love