குளோபல் தமிழ்ச் செய்தியாளர்;
இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட கேப்பாபிலவு காணியில் 180 ஏக்கர் மக்களுக்கு கையளிக்கப்படும் என விளம்பரப்படுத்தி கௌரவ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் இன்று புதன் கிழமை வருகை தந்தார்
ஆனால் அவர்களால் விடுவிக்கப்பட என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் 141 நாட்களாக போராடிவரும் மக்களுக்கு சொந்தமானது அல்ல எனவும் மத்தியதர வர்க்கத்தினர் ஆறு பேருக்கு வழங்கப்பட்ட காணியையும் அரசுக்கு சொந்தமான காணியை விடுவிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இக்காணி தற்போது வன இலாகாவிற்கு சொந்தமானது என எல்லையிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தர வர்க்கத்தில் உள்ள காணி உரிமையாளர்கள் ஆறு பேரும் இந்த நாட்டில் இல்லை ஆகவே இந்த காணியை கௌரவ அமைச்சர் யாருக்கு விடுவிக்கின்றார் அரசுக்கா ? என அவர் கேள்வி எழுப்பினாhர்.
141 நாட்களாக போராடிவரும் மக்களின் ஒரு துண்டு காணியைக்கூட விடுவிக்க முடியாத அமைச்சர் மக்களின் எதிர்ப்பலைகளை தாக்கு பிடிக்க முடியாது ஆடம்பர நிகழ்வாக செய்ய நினைத்த நிகழ்வு கைவிடப்பட்டு திரும்பியுள்ளார். மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து காணியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி தெரிவித்துள்ளார்.