344
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் மிகச் சிறந்த குறூந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட், லண்டன் உலக சம்பியன் கிண்ண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார்.
100 மீற்றர் மற்றும் 100 தர நான்கு அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் போல்ட் பங்கேற்க உள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் லண்டனில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக போல்ட் பங்கேற்கும் இறுதிப் போட்டி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டி அந்த வெற்றிக் களிப்பில் ஓய்வு பெற்றுக் கொள்ள விரும்புவதாக 30 வயதான போல்ட் தெரிவித்துள்ளார்.
Spread the love