குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸின் இராணுவத் தளபதி பீரே டி வில்லியேர்ஸ் ( Pierre de Villiers )பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (( Emmanuel Macron ) னுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவகாரத்தில் இராணுவத் தளபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை வெடித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கு நிதி குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தம்மால் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியாது எனவும், உரிய முறையில் கடமையாற்ற முடியாது எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி வெற்றிடத்திற்கு 55 வயதான ஜெனரல் பிரான்சிஸ் லிகோன்றி (General Francois Lecointre) ஐ பிரான்ஸ் ஜனாதிபதி நியமித்துள்ளார்.