இந்தியா, சீனா இடையே எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை இந்தியா வாபஸ் பெற வேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா பூடான் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் சிக்கிம் மாநில எல்லையில் உள்ளது. டோக்லாம் என்ற பகுதியில் சீனா வீதி அமைப்பதனை இந்தியாவும், பூடானும் எதிர்த்துள்ள நிலையில் சிக்கிம் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களைக் குவித்துள்ளன. இந்நிலையில், எல்லையில் உள்ள படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியாவை சீனா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு எல்லையை தாண்டி குவிக்கப் பட்டுள்ள படைகளை இந்தியா வாபஸ் பெறும் என்று நம்பு கிறோம் என சீனா வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா ராணுவத்தினர் போர் பயிற்சியிலும் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதிர்வரும் ம் 27ம்திகதி சீனா செல்கிறார் எனவும் அப்போது எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.