இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இஸ்லாமிய தின கலாச்சரா விழா கம்பளை சாஹிரா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நவம்பர் மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றன.
ஆந்நிகழ்வின் போது இன்றைய தினம் மீலாத் நபி விழா தொடர்பாக நாடளாவிய ரீதியில் நடாத்தபட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.
தொடர்து இரண்டு நாட்கள் நடைபெரும் இந்த விழாவில் இலங்கை முஸ்லிம் மக்களின் கலை¸ கலாச்சார¸ பொருளாதாரம்¸ பண்பாடு அபிவிருத்தி ரீதியிலான நிகழ்வுகள் உட்பட பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றதாகவும் இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸ இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவித்தான¸ கல்வி அமைச்சின் தமிழ்மொழி கல்வி அபிவிருத்தி பிரிவிற்கான பனிப்பாளர்¸ எஸ்.முரளிதரன்¸ முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் கிரேஷ்ட பணிப்பாளர் இசட். தாஜூடீன்¸ கம்பளை சாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சிராஜ்¸ பாடசாலையின் பகுதி தலைவர்கள்¸
கல்லூரியின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்¸ உட்பட பழைய மாணவர் சங்க செயலாளர்¸ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது