குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைய தளத்தை முடக்கிய நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் இவ்வாறு விடுதலை செய்துள்ளார்.
17 வயதான மாணவர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் ஜனாதிபதியின் இணைய தளத்தை முடக்கியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் தெரிவித்திருந்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.