குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழு நேற்றைய தினம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாணவி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான சுவிஸ் குமார் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர் தப்பிச் செல்ல உதவியதாக பிரதிக் காவல்துறை மா அதிபரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவின் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.