178
வடமாகாண கல்வி அமைச்சரை, எதிர்க்கட்சி தலைவர் தன் தலையினை தொட்டுக்காட்டி நாம் இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்தார்.
வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரினால் நேற்றைய அமர்வின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தனது செல்வாக்கினை பயன்படுத்தில் கொக்குவில் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமித்து உள்ளதாக குற்ற சாட்டினை முன் வைத்தார்.
அக் குற்ற சாட்டினை மறுத்த கல்வி அமைச்சர் தாம் அவ்வாறு செல்வாக்கின் அடிப்படையில் புதிய அதிபரை நியமிக்கவில்லை. சட்ட ஒழுங்கு முறையின் பிரகாரமே அதிபர் நியமிக்கப்பட்டார். இவர்கள் (எதிர்க்கட்சி தலைவர்) காலத்தில் ஸ்ரீதர் தியட்டரில் என்ன செய்தார்கள் எனவும் தெரியும் ஸ்ரீதர் தியட்டர் முன்பாக கல்வி குழு என அலுவலகம் நடாத்தி என்ன செய்தார்கள் என்றும் எமக்கு தெரியும் என தெரிவித்தார்.
அதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் இந்த குற்றசாட்டை முன் வைத்தது நான் அதுதொடர்பில் என்னுடன் கதைக்க வேண்டும் அதை விடுத்து தேவையற்ற கதைகள் கதைக்க வேண்டிய தேவை இல்லை இவ்வாறு கதைத்தால் நான் இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டி வரும் என தனது தலையினை தொட்டுக்காட்டி கடுமையான தொனியில் கூறினார்.
அதனை தொடர்ந்து அவைத்தலைவர் இருவரையும் சமாதானப்படுத்தி அமரவைத்தார்.
Spread the love