294
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அமெரிக்கப் பிரஜைகள் வடகொரியாவிற்கு பயணம் செய்வது தடை செய்யபப்ட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஹீத்தர் நாவேர்ட் (Heather Nauert ) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தடை உத்தரவு குறித்து பத்திரிகையில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மாணவர் வடகொரியாவில் வைத்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
பயணத் தடை அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடகொரியாவிற்கு அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்ய வேண்டுமாயின் விசேட அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love