ரஷ்யாவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜிம் மற்றிஸ் (Jim Mattis) தெரிவித்துள்ளார்.
அவர் கொல்லப்பட்டிருந்தால் கண்டிப்பாக தங்களுக்கு தெரியாமல் இருக்காது எனவும் எனவே அவர் உயிரோடு இருப்பதாகவே கருதுகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங்களை அரச படையினர் மீட்டுள்ள நிலையில் படையினரின் வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவித்திருந்தது.
ரஷ்ய ராணுவமும் பக்தாதி உயிரிழந்து விட்டதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே அல்-பக்தாதி மரணமடைந்ததாக வந்த தகவல்களை அமெரிக்கா மறுத்துள்ளது.