இதுவரையில் எந்த அரசாங்கமும் தீர்வை வழங்காத நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று குப்பைகள் தொடர்பில் நாட்டில் அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, முழு நாட்டுக்கும் சவாலான இத்தகைய பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்ற போது எதிர்ப்புகளைப் போன்று தீர்வுகளும் மிகவும் முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
கிரிந்திவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று (22) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.