169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலர் கேமரத்ன (வயது -58) இலங்கை நேரம் இன்று பின் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.நல்லூர் பின் வீதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகஸ்தர் கேமரத்ன இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.
மகசீன் மீட்பு.
அதேவேளை துப்பாக்கிதாரி வீழ்த்தி விட்டு சென்ற கைத்துப்பாக்கியின் மகசீன் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டு உள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இருந்து குறித்த துப்பாக்கியின் வெற்று மகசீன் மீட்கபட்டு உள்ளது.
Spread the love