165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். எனினும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை இன்னமும் முன்னேற்றம் அடைய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love