164
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளபப்ட்டு உள்ளது. இது நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடு. எனவே தாக்குதலாளியை விரைந்து கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை வடமாகாண சட்டத்தரணிகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
தனியார் போக்குவரத்து சங்கம் பகிஸ்கரிப்பு.
நல்லூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் நீதிபதியை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை நாம் கண்டித்து நாளை திங்கட்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட போகின்றோம் என தனியார் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.
Spread the love