குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரி தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் யாழ்.அரியாலை பகுதியில் இருந்து யாழ். பொலிசாரினால் மீட்கப்பட்டு உள்ளது.
நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரி வீதியில் வந்தவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை துப்பாக்கி முனையில் பறித்து தப்பி சென்று இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை யாழ்.அரியாலை பகுதியில் வீதியோரமாக கைவிட ப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை யாழ்.போலீசார் மீட்டு உள்ளனர்.
தாம் துப்பாக்கிதாரியை நெருங்கி விட்டதாகவும் மிக விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் போலிசார் தெரிவித்தனர்.