190
நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சியினரும் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் அறந்தாங்கி அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Spread the love