குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையின் சிலரது நடவடிக்கைகளினால் காவல்துறை திணைக்களத்திற்கே களங்கம் ஏற்படுவதாக ஆசிய மனித உரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.
காவல்துறை திணைக்களத்தின் சில சிரேஸ்ட அதிகாரிகளின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த காவல்துறை திணைக்களத்திற்கும் களங்கம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில உயர் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் குறைந்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகளை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்தளாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேக நபருக்கு உதவியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்குஇ குற்றவியல் சட்டத்தின் 209ம் சரத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஓர் சந்தே நபருக்கு அடைக்கலம் வழங்குதல்இ தப்பிச் செல்ல உதவுதல் சட்டத்தின் பிரகாரம் குற்றச் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.