200
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கொழும்பு துறைமுகத்தில் விமான நிலையமொன்று அமைப்பது குறித்து அரசாங்கம் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது. மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பத்து ஆண்டுகளில் இந்த விமான நிலையத்தை நிர்மானித்தால் கட்டுநாயக்கவிற்கு செல்லாது, கொழும்பிலேயே விமான பயணங்களை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தினை வலுவான ஓர் துறைமுகமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love