இலங்கை பிரதான செய்திகள்

புத்தர் சிலையை கொள்ளையிடச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புத்தர் சிலையை கொள்ளையிடச் சென்ற நபர், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மீகலவ லஸ்ஸனகம பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் புத்தர் சிலை மற்றும் இரத்தினக்கல் என்பனவற்றை கொள்ளையிட ஆயுதம் தாங்கிய நிலையில் இரண்டு கொள்ளையர்கள் சென்றுள்ள நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் மீது சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயற்சித்தனர் எனவும் அதன் போது காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது. மற்றைய  சந்தேக நபர்    காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.