198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
உயிரிழந்த போது காவல்துறை சார்ஜன்டாக கடமையாற்றிய ஹேமசந்திரவை உப காவல்துறை பரிசோதகராக பதவி உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனை அறிவித்துள்ளார். ஹேமசந்திரவின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love