181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் டெங்குவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 301 ஆக உயர்வடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து ஐந்தாயிரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டில் டெங்குவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டோரின் இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love