198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான புத்துவெட்டுவான் கிராமத்தைச் சேர்ந்த 8 குடும்பங்களுக்கு தனியாா் ஒருவரினால் 25 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு இலட்சம் ரூபா வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தையல் இயந்திரம்,நீர் இறைக்கும் இயந்திரம், மாடு என்பன வழங்கி வைக்கபட்டுள்ளது.
இந்த உதவிகளை வேலாயுதம் சிவநிதன் என்வரே வழங்கியுள்ளாா் .இவ் உதவி வழங்கும் நிகழ்வில் துனுக்காய் பிரதேச செயலாளர், ஐயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, புத்துவெட்டுவான் கிராமசேவகர் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தார்கள்.
Spread the love