185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது புதல்வர் யோசித ராஜபக்ஸ ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளனர்.
நாளைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு யோசித மற்றும் சிராந்தி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னணி ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிராந்தி மற்றும் யோசிதவிற்கு இந்த கொலையில் தொடர்பு உண்டு என முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love