குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் பரவிய காட்டுதீயை அடுத்து சுமார் 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்மெஸ்-லெஸ் மிமோசெஸ் என்ற இடத்தில் பரவிய காட்டுதீயை அணைப்பதற்காக அதிகாரிகள் பெருமளவு தீயணைப்பு படையினரை ஈடுபடுத்தியுள்ளனர்.
மத்தியதரை கரையோரப்பக்கமாக உள்ள இந்த பகுதியில் சுமார் 4000 ஏக்கர் நிலம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து சுமார் 10,000ற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
திங்கட்கிழமை முதல் 4500 தீயணைப்பு படையினரும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதன் போது 12 தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் பிரிட்டனை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகளும் சிக்குண்டதாகவும் பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன