குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கின் பிரகாரம் இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீதிமன்றம் நீக்க உத்தரவு இட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்துவதற்கான எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்காமை காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்பபை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் 22 அமைப்புக்களை தடை செய்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2006ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் இணைத்துக்கொண்டது.
விடுதலைப் புலிகளின் நிதிகளின் தொடர்ச்சியான முடக்கம் ரத்து செய்யப்படுவதை நீதிபதி நீதிமன்றம் உறுதிப்படுத்துவதாகவும் தீர்ப்பின்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாலஸ்தீனத்தின் கமாஸ் அமைப்பின் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
1 comment
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட தடையை நீக்கிய மாதிரி, தடை செய்த மற்ற நாடுகள் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சுதந்திரமாக தமது இயல்பான செயல்பாடுகளைச் செய்ய துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.