189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் ஒரு அங்குலமேனும் வெளிநாட்டவர்களுக்கு மொத்தமாக எழுதிக் கொடுக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் ஒரு சிலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புரிந்துணர்வின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரிந்துணர்வின்றி செயற்பட்டு வரும் ஒரு சிலருக்காக நாட்டின் பெருமளவிலான மக்கள் அழுத்தங்களை எதிர்நோக்க இடமளிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகளில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் பின்வாங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love