பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவிவிலகியுள்ளார். ஆளுனர் மாளிகைக்கு சென்ற நிதிஷ்குமார், தனது பதவிவிலகல் குறித்து அறிவித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் பீகாரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தன்னால் ஆட்சியை தொடர முடியாது எனவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதவி விலகல் கடிதத்தினை ஆளுனர் ஏற்றுக்கொண்டதாகவும் அடுத்த நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து பதவியில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்த அவர் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பீகார் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேஜஸ்வி யாதவ் விலக மறுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நிதிஷ்குமார் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை பீகார் பதவி விலகியமைக்காக நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி டுவிட்டரில் ஊழலுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவதற்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் உங்களின் இந்த நேர்மையான நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், உறுதுணையாகவும் இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்