212
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கலாசார பேரவையினால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்ற கரை கழில் 2017 இற்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
கரை கழில் இதழானது 2011 ஆம் ஆண்டு முதல் பிரதேசத்தின் கலை கலாசார, வாழ்வியல்,தொன்மைகள், ஆன்மீகம் மரபுரிமைகள் போன்ற விடயங்களை பிரதிபலிக்கும் வகையிலான கட்டுரைகள்,சிறுகதைகள், கவிதைகள் ஆவணத்தரவுகள் என்பனவற்றை தாங்கி வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வாறே 2017 ஆம் ஆண்டுக்கான ஆக்கங்களும் பிரதேச கலைஞர்களிடம் இருந்து கலாசார பேரவை எதிர்ப்பார்க்கிறது.
எனவே மேற்படி விடயங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆக்கங்களை 20-08-2017 இற்கு முன்னதாக தலைவா் பிரதேச கலாசார பேரவை கரைச்சி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
Spread the love