குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தால் அது எரிபொருள் நிறுவனங்களை பாதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ரஸ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ள நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறு புதிதாக பொருளாதாரத் தடைகளை ரஸ்யா மீது விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் விரும்பவில்லை. ரஸ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி ட்ராம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, இந்த புதிய பொருளாதாரத் தடை இடையூறாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் விவகாரங்களில் தலையீடு செய்தமைக்காக தண்டிக்கும் நோக்கில் இவ்வாறு பொருளாதாரத் தடை விதிக்கப்பட உள்ளது.
ரஸ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதனை எதிர்க்கவில்லை எனவும், எனினும் எதேச்சாதிகார போக்கில் திட்டமிடப்படாத வகையில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் ஐரோப்பாவின் எரிபொருள் பாதுகாப்பினை பாதித்துவிடக் கூடாது எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் Jean-Claude Juncker தெரிவித்துள்ளார்.