குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை தடுப்பதற்காக சீனா தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவே வடகொரியாவிற்கான பெருமளவு நிதி கிடைப்பதற்கான காரணம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக சீனா வடகொரியா விடயத்தில் பெருமளவு செல்வாக்கு செலுத்தலாம் யூலி பிசப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் சீனாவிற்கு ஏற்றுமதி உறவுகள் உள்ளன,தொழிலாளர்களிற்கான ஊதியம் குறித்த ஏற்பாடுகள் உள்ளன வெளிநாட்டு மூலதனம் தொழில்நுட்பம் போன்றவை வடகொரியாவிற்கு கிடைப்பதற்கு சீனாவே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.