166
சூழ்ச்சித் திட்டங்களை தீட்டினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் நாட்டு மக்களின் நன்மைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வெறு சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மக்களினால் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீளவும் வேறும் வழியில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love