சசிகலா விவகாரத்தில் டிஜிபி சத்தியநாராயண ராவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என முன்னாள் டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது எனவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலாவிடம் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றுள்ளனர் எனவும் சிறைத்துறை டிஐஜி ரூபா முறைப்பாடு செய்திருந்தார்.
அதை மறுத்த முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ், இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணி யாற்றும் தன் நேர்மையான பணியின் மீது ரூபா களங்கம் ஏற்படுத்தி யுள்ளார் எனவும் நாட்களுக்குள் ரூபா தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 50 கோடி ரூபா கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் ரூபாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
எனினும் தான் தனது கடமையைதான செய்தேன் எனவும் தன் மீது எந்த முறைகேடு வழக்கும் இல்லாததால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் வேறு எதையும் பேச விரும்ப வில்லை எனவும் ரூபா தெரிவித்துள்ளார்.