இலங்கையின் வரட்சி நிவாரணப் பணிகளுக்கு தென் கொரியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இன்று (28) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த கொரிய பாராளுமன்ற தூதுக்குழு எட்டு தண்ணீர் பௌஸர்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கையளித்ததென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவர்களான கொரிய தேசிய பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ர்ழபெ ஆழழn-தழபெ மற்றும் லுழழ முi-தரநெ ஆகியோர் தண்ணீர் பௌஸர்களுக்கான திறப்புகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
நாட்டின் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வரட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நீர் தேவையாக உள்ள நிலையில், கொரிய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த பௌஸர்கள் மிகவும் பயனுடையதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததுள்ளார்.
இந்த பௌஸர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.