குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக தீர்ப்பு அளித்திருந்தது.
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய இயக்கங்களின் சொத்துக்களை முடக்குவதாக 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.
2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.