ஜேர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்திய நபர் நபர் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் தீவிரவாதிகளுக்கான அறிகுறிகள் உள்ளன எனவும் அதேசமயம் அவர் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்தவர் 50 வயதான நபர் ஒருவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் பல்பொருள் அங்காடியில் கத்தியால் வெட்டி தாக்குதல் – ஒருவர் உயிரிழந்துள்ளார்
Jul 29, 2017 @ 02:48
ஜேர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் நேற்றையதினம் திடீரென புகுந்த நபர் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த நபர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். .தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தினையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.