235
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பாவை இல்லை என்பதனை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது.
ஹம்பாந்தோட்டை எண்ணெய்த் தாங்கிகளை சீன நிறுவனத்திற்க வழங்குவது குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமரின் தாளத்திற்கு ஆட்டம் போடாத நபர் என்றால் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உடன்படிக்கை சட்டவிரோதமானது எனவும் பாராளுமன்றின் அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love