குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-
இன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன அபகீர்த்தியான இந்திய இலங்கை உடன்படிக்கையை ஜூலை 29ம் திகதி கைச்சாத்திட்டதாகவும் அதேவிதமாக அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்கவும் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்காலையில் வைத்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பல தலைமுறைகள் கனவு கண்டதாகவும் அதிஸ்டவசமாக தமக்கு அந்தக் கனவை மெய்ப்படச் செய்ய முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முகாமைத்துவத்தின் அடிப்படையில் லாபமீட்டக்கூடிய ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், நாட்டின் முக்கிய சொத்துக்களை நட்டமடையச் செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வழிமுறை ஒன்றை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.