குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய பொருளாதாரப் பேரவை ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார கொள்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு தேசியப் பொருளாதாரப் பேரவை உருவாக்கப்பட உள்ளது.
ஜனாதிபதிக்கு நேரடியாக பதில் சொல்லக்கூடிய வகையில் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்தப் பேரவை தொடர்பிலான உத்தேச திட்டம் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அனைத்து திட்டங்களும் இந்த பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இந்தப் பேரவையை மீறி வேறு நிறுவனங்கள் பொருளாதார கொள்கை வகுப்பு செயன்முறையில் ஈடுபட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், ஏற்கனவே பிரதமரும் இவ்வாறான ஓர் அலகினை நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.