181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு காணியும் எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் எந்தவொரு காணியும் எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிக்கடுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் அவ்வாறான பின்னணியிலேயே நாட்டை அரசாங்கம் முன்னோக்கி நகர்த்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love