162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அம்பலமாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நீக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் கருணாநாயக்கவை நல்லாட்சி அரசாங்கம் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love