காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூருவில், எதிர்வரும் 5ம் திகதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளர்h.
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகின்ற நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தற்போது அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நாம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்தாக வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவினை மீறினால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்த சித்தராமையா இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசிக்க இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நீர் பிரச்சினையை முடித்து வைக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும் எனவும் எனினும் அவர் இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார எனவும் அவர் தெரிவித்துள்ளார்.