உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களும் மாடுகளை விற்பனை செய்பவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடருகிறது.
இப்படி தாக்குதல்கள் நடந்துகொண்டு இருந்த காலகட்டத்தில்தான் இந்தியா மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டில் மட்டும் 1.56 மில்லியன் தொன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இதன்மூலம், ஏற்றுமதியில் பிரேசில், அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாது, 2026 வரை 1.93 மில்லியன் தொன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.