156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை என சீன அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான சீனத் தூதரகத்திடம் சீன அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. பங்குகள் தொடர்பில் சீன அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிப்பதற்கு சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love