153
ஸ்பெயினில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் மைய மேடையின் ஒரு பகுதி தீ பற்றி எரிந்ததால், நிகழ்வில் கலந்து கொண்ட 22,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள டுமாரோலேண்ட் யுனைட் ஃபெஸ்டிவல் விழாவின் மேடையின் இடது புறம் தீ பிடித்து எரிவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, விழாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ள விழா ஒருங்கிணைப்பாளர்கள்,இது தவிர வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Spread the love