175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக் கொள்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அலுத்கம கந்தே விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முரண்பாட்டு அரசியலினால் எவருக்கும் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை நாட்டுக்கு பல்வேறு நலன்களை அளிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love