குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
30 வீதமான டெங்கு நோயாளிகள் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் 5 முதல் 19 வயதுடையவர்களே இவ்வாறு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இலங்கையில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்வடைந்து செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் ஜூலை 28 திகதி வரையில் இவ்வாறு 1 லட்சத்து 10 ஆயிரத்து 372 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டில் டெங்கு நோயினால் இதுவரையில் 301 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.