குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் பல்கலைகழக மாணவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 2016 ம் ஆண்டு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது தேசிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது
அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது
2015 முதல் 2016 வரையான காலப்பகுதியில் ஆகக்குறைந்தது ஏழு வீதமான மாணவர்கள் ஓரு தடவையாவது பாலியல் ரீதியிலான தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர் என்றும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
39 பல்கலைகழகங்களை சேர்ந்த 31000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் அனைத்து பல்ககலைகழகங்களிலும் ஏதோ ஓரு வகையில் துன்புறுத்தல் நிலவுவது தெரியவந்துள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மீது குற்றமிழைத்தவர்கள் யார் என்பது தங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளனர்.