குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லா தீர்மானம் வரையில் காத்திருக்காது பதவி விலகுமாறு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஏற்கனவே ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் போலியான தகவல்களை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிதாக நம்பிக்கையில்லா தீர்மானமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.