177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் 01ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது.
முன்னதாக பிற்பகல் 03.30 மணி – ஊடகவியலாளர் பொது நினைவுத் தூபியில் (பிரதான வீதியில், யாழ் நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை) மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பிற்பகல் 04.00 மணிக்கு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.
Spread the love